நாளாந்த நோயாளர்களின் சிகிச்சைக்காக சுமார் 1,000 அத்தியாவசிய மருந்துகள் காணப்படும் நிலையில், இவற்றில் 60 மருந்துகளுக்கு மாத்திரமே விலைக் கட்டுப்பாடு காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கடந்த காலங்களில் பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்திருந்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவா் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், அத்தியாவசிய மருந்துகளின் விலைகளும் குறைய வேண்டும் எனவும், அதனை வழங்குவதற்கு உரிய நடைமுறைமையை சுகாதார அமைச்சு தயாரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்து இறக்குமதியாளர்கள் தமக்கு விரும்பியவாறு மருந்துகளின் விலையை அதிகரிக்கின்றனர், ஆகவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் மருத்துவா் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.

Share.
Exit mobile version