தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முறையான ஒழுங்குமுறை முறையைப் பின்பற்றி இந்தப் பாடசாலைகளை வழமையான நிலைக்குக் கொண்டுவருவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (11) தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், அமைச்சின் தேசிய பாடசாலை பிரிவும் மாகாண கல்வி அமைச்சும் இணைந்து இந்த அணியை நியமிக்கவுள்ளது.

சில தேசிய பாடசாலைகளின் செயற்பாடுகள் பல வருடங்களாக கண்காணிக்கப்படவில்லை எனவும், சில தேசிய பாடசாலைகள் பெயருக்கு மாத்திரம் இயங்கும் நிலை காணப்படுவதால் அதற்கான தேவை குறைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share.
Exit mobile version