இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் உள்நாட்டு கடன் அதிகரிப்பால் நாட்டின் மொத்த கடன் 685.3 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது என்று திறைசேரி பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் நாட்டின் மொத்த பொதுக் கடன்  8470.3  கோடி டொலர்களில் இருந்து 9156.1 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது.

கருவூல உண்டியல்கள், கருவூல பத்திரங்கள், பாதுகாப்பு அமைச்சின் கடன் கணக்கு, ஓய்வூதிய பணிக்கொடை போன்ற பல வடிவங்களில்அரசாங்கம் மேலும் கடன் வாங்கியதால் உள்நாட்டு கடன் டிசம்பரில் 4ஆயிரத்து 12 கோடி டொலர்களில் இருந்து மார்ச் மாதத்துக்குள், 4689 கோடி டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில், அரசின் மொத்த வெளிநாட்டு கடன் 3609 கோடி டொலர்களாக காணப்பட்டது.

முக்கிய கடனாளிகளான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் ஆயிரம் கோடி டொலர்கள் , பாரிஸ் கிளப் நாடுகளிடம் 454 கோடி டொலர்கள், பாரிஸ் கிளப் அல்லாத நாடுகளிடம் 679 கோடி டொலர்கள் மற்றும் வணிக கடன்கள் 1470 கோடி டொலர்களாக கடன் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு கடன்களில் 70 வீதம் நிலையான வட்டி வீதத்தையும் 29 வீதம் தளம்பல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Share.
Exit mobile version