ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

173 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்படி, 443 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி போட்டியின் இறுதி நாளான இன்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 49 ஓட்டங்களையும், ரஹானே 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அணித்தலைவர் ரோஹித் சர்மா 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் நாதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஸ்கொட் போலன்ட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Share.
Exit mobile version