நாட்டின் தனிநபர் கடன் சுமை, மத்திய அரசு எடுத்த மொத்தக் கடனில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 794,376 ரூபாவாகவும், அவ் ஆண்டிற்கான தனிநபர் பொதுக் கடன் 795,223 ரூபாவாகவும் காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதே ஆண்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,997 டொலர்களாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், 2022 ஆம் ஆண்டில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,474 டொலராகக் குறைந்துள்ள நிலையில், ரூபாயின் அந்நியச் செலாவணி வீழ்ச்சியின் விளைவாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,088,667 ரூபாயாகவும், தனிநபர் பொதுக் கடன் பங்கு 1,239,443 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில், 2021 இல், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் பொதுக் கடன் பங்கு கிட்டத்தட்ட சமமாக இருந்ததாகவும், 2022 இல், கடன் பங்கு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக காணப்படுவதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version