ஜூலை மாதம் அமுலாகும் மின்கட்டண குறைப்பு பட்டியல் வெளியானது
மின்சாரத்துறை அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜூலை – டிசம்பர் வரையான மின்கட்டண சீராக்கல் விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி 0-30 அலகுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு மட்டுமே 26% மின்கட்டண குறைப்பு அமுலாகும்.
மொத்தமாக 3% மின்கட்டணம் மட்டுமே குறைகிறது.
மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25%ஆல் குறைக்க வேண்டும்/முடியும் என பதவி பறிக்கப்பட்ட இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.