இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூன் 09) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி : நேற்றைய தினம் 283.68 ரூபாவாக இருந்த அமெரிக்க டெலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 285.14 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300.47 ரூபாவிலிருந்து 302.01 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : நேற்றைய தினம் 284.82 ரூபாவாக இருந்த அமெரிக்க டெலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 286.04 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 299 ரூபாவிலிருந்து 301 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

சம்பத் வங்கி : நேற்றைய தினம் 287 ரூபாவாக இருந்த அமெரிக்க டெலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 288 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 299 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

Share.
Exit mobile version