கடந்த மாதம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன நாட்டவர் இன்று (08) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரின் நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மே 29 ஆம் திகதி, குறித்த சீன நாட்டவரை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அவரை சீனாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கோரி, குறித்த சீன பிரஜையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

Share.
Exit mobile version