நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் தாய் கோழிகளுக்கு பதிலாக 176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய தேசிய கால்நடை மேம்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

ஒரு மாதத்தில் வாரத்திற்கு 44,000 முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு சபை தலைவர் பேராசிரியர் எச். டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார்.

தாய் கோழிகளை இறக்குமதி செய்வதால் முட்டை மற்றும் குஞ்சுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்று விவசாய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Share.
Exit mobile version