ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ராஜபக்ஷ கூட்டணி அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள சீர்திருத்தங்களின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளதாக அறிவித்துள்ள போதிலும், இந்த ஆண்டு பொருளாதாரம் 4.3% சுருங்கும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று (07) வெளியிடப்பட்ட உலக வங்கியின் குளோபல் எக்கொனாமிக் ப்ராஸ்பெக்ட்ஸ் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையின் படி, 2021இல் 88.549 பில்லியன் டொலராக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2022இல் 77.060 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 73 பில்லியன் டொலர் அளவுக்கு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையை மையமாக வைத்து, பொருளாதாரம் இன்னும் நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும், நாட்டின் உள் அரசியலும் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க, நந்தலால் வீரசிங்க ஆகியோரின் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய உத்தி என்பன பொருளாதாரத்தை சுருக்கி, அந்நிய செலாவணி விகிதத்தை குறைப்பதாகும்.

அத்தோடு, இந்த நாட்டில் வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version