புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு உரிம காலத்தை தாண்டிய திட்ட உரிமங்களை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2023-2026 மற்றும் 2026-2030 ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட அமலாக்கத் திட்டம் குறித்து நேற்று (07) நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டெண்டர் விடப்பட்ட ஆனால் இன்னும் சாதகமான பணிகளை மேற்கொள்ளாத விநியோகஸ்தர்களின் அனுமதியை ரத்து செய்ய மின்சார சபைக்கு மற்றும் சூரிய சக்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகஸ்தர்களின் கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்தும் திட்டம், புதிய மின்சார கொள்முதல் விலை சூத்திரம், அடுத்த 18 மாதங்களில் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் தற்காலிக உரிமம் வழங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version