அமெரிக்க திறைசேரியின் கீழ்வரும் ஆசிய நிதியத்தின் பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்க குடியியல் சமூகம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதாரச் செழுமையை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் பாதை குறித்து அவர் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக அவர் கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் நேற்று (06.06.2023) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான தனது சந்திப்பின் போது, பிரதி உதவிச் செயலாளர் 75 வருட கால இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கான அமெரிக்காவின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் நிலையான, வளமான நாடு என்ற தனது பகிரப்பட்ட பார்வையை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதனையடுத்து உயர்மட்ட அமெரிக்க அதிகாரி, தூதுவர் சுங் சகிதம் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை செவ்வாயன்று அமைச்சகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஈடுபாடு மற்றும் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

Share.
Exit mobile version