ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 வீதத்தால் குறைப்பதற்கும் 03 மாதங்களுக்கு ஒருமுறை மருந்துகளின் விலையை மீளாய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்தில் கொண்டு பல சந்தர்ப்பங்களில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 97 வீதம் வரை உயர்த்துவதற்கு சுகாதார அமைச்சு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கம் பின்பற்றும் தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தல் வேலைத்திட்டத்தின் விளைவாக, ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு, மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share.
Exit mobile version