இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்படவிருந்தது.

ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் அடங்கிய அமர்வு, இது தொடர்பான தீர்ப்பை ஜூலை 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பதன் காரணமாக இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமரத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

Share.
Exit mobile version