கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இதனை தெரிவித்துள்ளார்.

சுஜிவ தம்மிக மேலும் கருத்து தொிவிக்கையில்,

விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பின் பெறுபேறாக அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும்.

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காண்பித்து அதனை உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப்பார்க்கிறார்கள்.

இன்னும் சில நாட்களுக்கு பின்னர் கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானியை அறிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் கோருவர்.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் கோழி உற்பத்தி அழிவடையும்.

உடனடியாக தற்போது நிலவும் விலையினை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக இதில் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் கோழிப் பண்ணைகள் நாட்டிலிருந்து காணாமல் போய்விடும்.

எனவே கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version