இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிக்கு வரும் தகுதிகள் தனக்கு இருப்பதாக ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பேட்டி நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்குமா, அதற்கு முன்னர் நடக்குமா, ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அதனை செய்வாரா என்பது எமக்கு தெரியாது.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் நாங்ள் அதற்கு தயார். பொதுத் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். ஜனாதிபதியாக பதவிக்கு வருவது உங்களது எதிர்பார்ப்பா என அனைவரும் என்னிடம் கேட்கின்றனர்.

ஜனாதிபதியாக பதவிக்கு வருவதில் என்னிடம் இல்லாத தகுதிகள் என்ன என்று நான் கேட்கிறேன். நாங்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதா?, கொழும்பில் உள்ள பெரிய பாடசாலைகளில் கல்வி கற்கவில்லை என்பதா?, எமக்கு சர்வதேச அனுபவங்கள் இல்லை என்றா கூறுகின்றனர்?.

நான் சர்வதேச தளத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன். நான் வியன்னா மாநாட்டின் தலைவராக பதவி வகித்துள்ளேன்.

நாட்டில் மிகப் பெரிய பல திட்டங்கள் எனது தலைமையில் வெற்றிகரமான முடிக்கப்பட்டன எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version