இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் இடையில் சரக்கு கப்பல் சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது.
இலங்கையில் இயங்கும் நிறுவனம் ஒன்றுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு நிறுவனங்கள் கடல் வழியாக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிகளை கோரியுள்ளன.
இதனிடையே காரைக்கால் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவையை கடந்த மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்திய தரப்பில் மேலும் காலஅவகாசம் கோரியதால், பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சரக்கு கப்பல் சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.