தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் மீது மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்று முதல் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி கழிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் கரண்டிகள், ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள், கப் (யோகட் கப் தவிர), கரண்டி, முட்கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் தயிர் கரண்டி போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு CEA தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பலமுறை தடை விதிக்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று பல பொருட்களுக்கான தடையும் அமலுக்கு வந்தது.

இந் நிலையிலேயே மேற்கண்ட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Share.
Exit mobile version