ஆபத்தான சுவாச தொற்றுகளுடன் கூடிய HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு தற்போது விசேட கவனம் செலுத்தி வருகின்றது.

அமைச்சின் கொவிட்-19 இணைப்பாளர் கலாநிதி அன்வர் ஹம்தானி, அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அதிகம் பரவியுள்ள இந்த வைரஸால் இலங்கை இன்னும் பாதிக்கப்படவில்லை, ஆனால் இது குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

கொவிட் மற்றும் காய்ச்சலின் அறிகுறிகளுடன் கூடிய இந்த வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share.
Exit mobile version