நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவும், மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில், மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில், மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version