நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு ட்ரோன் தொழிநுட்பத்தை பயன்படுத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தொழிற்பயிற்சி அதிகாரசபையில் ஒழுங்கு செய்யப்பட்ட ட்ரோன் பயிற்சி நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனை கூறியுள்ளார். 

நவீன ட்ரோன் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நேரத்தை சேமிக்க முடியும் எனவும், விரயத்தை வரையறுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல நாடுகள் ட்ரொன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும், துரதிஸ்டவசமாக இலங்கையில் தற்பொழுது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்கு ட்ரோன் தொழிநுட்பத்தை வெற்றிகரகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Share.
Exit mobile version