கடந்த 2022ஆம் ஆண்டில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனமானது 13 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக கடந்த மே மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனமானது இலங்கையின் பிரதிநிதியாகச் செயற்படுவதன் மூலம், கடந்த 2022 ஆம் ஆண்டில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய 5 சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாட்டு வந்தது. இந்நிறுவனத்தின் வருடாந்த செயற்பாட்டு இலாபம் 13 பில்லியன் ரூபாவாகும்.
மேலும், இந்த ஆண்டு 55,03,198 பயணிகள் நம் நாட்டு விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 266 வீதமானம் வளர்ச்சி என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஒரு வருட காலப்பகுதியில் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் மொத்த வருடாந்த வருமானம் 27,647 மில்லியன் ரூபாவாகும்.
வரி செலுத்தியதன் பின்னர் நிறுவனத்தின் இலாபம் 4,803 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் 1,983 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் தற்போது 3,854 பணியாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.