நாட்டில் கடந்த மூன்று நாட்களில் 955 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்காக நாளொன்றுக்கு 318 பேர் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு நேற்று (04) தெரிவித்தது.

அதற்கமைய, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 40, 359 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்ததாவது,

டெங்கு நோயின் பரவல் அதிகரித்துக் காணப்படுவதால், 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிறைந்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த மே மாதத்தில் மொத்தமாக 9,696 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 955 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில், கம்பஹா மாவட்டத்தில் 8,984 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 8,533 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2,542 பேரும் நோயாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் மொத்தமாக 20,059 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Share.
Exit mobile version