இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு மோசடியாக வரவு வைத்துக் கொண்டதாகக் கூறிய ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது குறித்த நபரிடமிருந்து நான்கு கைத்தொலைபேசிகள், மூன்று சிறிய கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம்கார்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, கஸ்பேவ, ராகம, வயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹாகொட கேகாலை, அனுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கந்தானைப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.