இதன்படி, இலங்கையில் பொருளாதார மையங்களில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை உயர்ந்து காணப்படுகின்றன.

மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாகங்களில் 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 75 ரூபா தொடக்கம் 100 ரூபாவாக இருந்தது.

தற்போது 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 350 ரூபாவாக உள்ளது. அதாவது 1 கிலோ ஆப்பிள் பழத்தின் விலை 1350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா, ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 தொடக்கம் 750 ரூபாவாகவும், ஒரு கிலோ கொய்யாவின் விலை 750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் 250 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிராம் தோடம்பழத்தின் விலை 817 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை ஆப்பிள் பழத்தின் விலை 836 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் பழச் சந்தையில் பப்பாசிபழம் ஒரு கிலோ 3830 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 1,572 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version