அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிவிப்பதற்காக அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களையும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களையும் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கிராமத்திற்குச் சென்று எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுப்பதற்கான பின்னணியை தயார் செய்யுமாறும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதத்திற்குள் பொருளாதாரம் சுபீட்சமான நிலையை எட்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சென்று தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.