பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவற்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாணந்துறை கடற்கரையில் இந்த ஆமை சுமார் 06 அடி 07 அங்குல நீளம் கொண்டது. இது குறித்து ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க கூறுகையில் ,

“உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விளிம்புகளை கொண்டுள்ளன. வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை மற்றும் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version