இந்த ஆண்டு பொசனை முன்னிட்டு 17,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 17,180 பதிவு செய்யப்பட்ட தன்சல்களை ஆய்வு செய்ததாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவு தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் பெருமளவிலான தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உபுல் ரோகண தெரிவித்தார்.

ஆய்வுகளின் போது, ஏற்பாட்டாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற எந்தவொரு உணவும் தன்சல்களில் வழங்கப்படுவதைத் தடுப்பதே தமது நோக்கமாகும் என உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆய்வுகள் தொடரும் என்றும் தேவையான இடங்களில் தலையிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதவேளை பதிவு செய்யப்படாத தன்சல்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version