2023 இல் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளது, இது டெங்கு நோயின் தீவிர நிலையை எடுத்துக் காட்டுகிறது.

தொற்றுநோயியல் பிரிவின் படி, ஜூன் 03 வரை, 2023 இல் இதுவரை மொத்தம் 40,206 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 8,970 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், மேல் மாகாணத்தில் 20,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமாகும்.

மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 60 அதிக ஆபத்துள்ள MOH பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

மே மாதத்தில் 9,290 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது ஜனவரி 2023 முதல் அதிக மாதாந்த நோயாளர்களை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்குமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version