பொசன் நோன்மதி முன்னிட்டு அநுராதபுரம் புனித நகருக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற இடங்களில் டைவிங் செய்வதை தடுக்க தேவையான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் பயணிப்பவர்களிடமும் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புனித நகரம் தொடர்பான குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் நுவன் குலதுங்க பக்தர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இன்று இரண்டு விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.