இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­துள்ள வெளி­நாட்டு கட­வுச்­சீட்­டு­களைக் கொண்­டுள்ள 162 இலங்கை ஹஜ் விண்­ணப்­ப­தாரிகளில் 35 பேருக்கே சவூதி அர­சாங்கம் ஹஜ் கட­மைக்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யுள்­ள­தாக அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வ­ருடம் சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு வழங்­கி­யுள்ள 3500 ஹஜ் கோட்­டாவில் இது 1 வீத­மாகும்.

வெளி­நாட்டுக் கட­வுச்­சீட்­டுக்­களைக் கொண்­டுள்ள 162 விண்­ணப்­ப­தா­ரி­களில் கண­வரோ அல்­லது மனை­வியோ வெளி­நாட்­ட­வ­ராக இருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரிகர் குழு எதிர்­வரும் 4 ஆம் திகதி அதி­காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சவூதி அரே­வி­யாவை நோக்கி பய­ணிக்­க­வுள்­ளது. இக்­கு­ழுவில் 62 பேர் அடங்­கி­யுள்­ளனர். அத்­தோடு ஹஜ் கட­மையை பூர்த்தி செய்­து­விட்டு இலங்கை யாத்­தி­ரிகர் குழு எதிர்­வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு திரும்­ப­வுள்­ளனர்.

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள், ஹஜ் முக­வர்­க­ளுடன் உடன்­ப­டிக்­கை­யொன்­றினை கைச்­சாத்­திட்டு பய­ண­மா­வதால் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உடன்­ப­டிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள சேவைகள், ஹோட்டல் வச­திகள் என்­பன வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென அரச ஹஜ் குழு முக­வர்­களைக் கோரி­யுள்­ளது.

Share.
Exit mobile version