புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அலி சப்ரி ரஹீம், அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில்,“மார்ச் 12 இயக்கம்” இதனை தெரிவித்துள்ளது.

மார்ச் 12 இயக்கம், எம்.பி.யின் முந்தைய பயணங்களை அவர் இதேபோன்ற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் அந்த இயக்கம் கவலை தெரிவித்ததுடன், சட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த மார்ச் 12 இயக்கம், எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரைப் பாதுகாக்கும் நகர்வுகளைக் கண்டித்து, மார்ச் 12 இயக்கம், பாராளுமன்றமும் ஜனாதிபதியும் செயலற்ற தன்மையால் இலங்கை தனது சட்டங்களை மதிக்காத நாடாக அங்கீகரிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Share.
Exit mobile version