நாட்டில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் உள்ளூர் சந்தையில் கோழியின் விலையை குறைப்பதற்கு தீர்வு வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலை அதிகரித்துள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கோழிப்பண்ணை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக தெரிவித்தார்.
விலையை குறைக்க வேண்டுமானால் கோழிக்கறி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.