கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படுவதால், எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகளின் விலை குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது.

குறிப்பாக நிலவும் பணவீக்க, டாலர் பிரச்சினை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, கைத்தொலைபேசிகள் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version