பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதிக வரி சுமை காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,163 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் நெருக்கடி நிலைதோன்றியுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் போது 8,540 விரிவுரையாளர்கள் இருந்தனர். இருப்பினும் நேற்று புதன்கிழமை 31 ஆம் திகதி 6,673 விரிவுரையாளர்கள் மாத்திரமே உள்ளனர். 5 மாதங்களில் 1,163 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது பாரதூரமான நிலைமையாகும். எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகளவிலான மூளைசாலிகள் வெளியேற்றமாகும்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு சிரமத்துக்கு மத்தியிலேயே புலமை பரீட்சில் மூலமே கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றனர். புலமைப்பரிசில் மூலம் வாழ முடியாதளவுக்கு உணவுகளின் விலைகள் காணப்படுகின்றன. 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவின்றியே பாடசாலைக்கு செல்கின்றனர்.

நாட்டிலுள்ள 72 இலட்சம் மக்கள் உணவினை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். 95 வீதமானவர்கள் போசாக்கான உணவினை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். சம்பளத்தில் 75 வீதத்தை உணவிற்கே செலவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version