ஒப்பீட்டளவில் மழை குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீளவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் செயலாளர் இந்துனில் போபிட்டிய தெரிவிக்கையில்,அடுத்த இரண்டு மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் மாதம் வரை இலங்கை இந்த நிலை தொடரும் என்று கூறினார்.“இயற்கையில் ஏடிஸ் நுளம்பின் சராசரி ஆயுட்காலம் இரண்டு வாரங்கள்.
நுளம்பு அதன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும், ஒவ்வொரு முறையும் சுமார் 100 முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த சூழலில், நாட்டில் கண்டறியப்படாத இனவிருத்தி செய்யும் இடங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் அதிக நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, டெங்குவைத் தடுக்கும் வகையில் மக்கள் தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு பொபிட்டிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.