தெங்கு உற்பத்திப் பொருட்களை சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சவூதி அரேபிய தூதகரத்தில் நேற்று (30.05.2023) இடம்பெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானிக்கும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரொஸான் பெரேராவிற்கும் இடையிலான குறித்த சந்திப்பு, சவூதி அரேபிய தூதகரத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது தெங்கு உற்பத்திப் பொருட்களை சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்வது சம்மந்தமாகவும் சவூதி முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டுவருவது சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டது.
இச்சந்திப்பில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திரு. சம்பத் சமரவிக்ரம மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் ஆலோசகர் கலாநி்தி கெரி (யான்போ) ஷாங் ஆகியோர் கலந்துகொண்டனர்.