2023 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 516,946 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 மே மாதம் முதல் 28 நாட்களில் 75,769 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் அண்டை நாடான இந்தியா மற்றும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.

Share.
Exit mobile version