இலங்கையை பொறுத்தவரையில் சட்டங்கள் எவ்வளவு இறுக்கப்படுகிறதோ அதை விட அதிகமாக கடத்தல்கள் இடம்பெறும் என இராணுவ ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், டிரான்சிஸ்டில் வருபவர்களை பார்க்கும் போது உதாரணமாக பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நபரொருவர் டிரான்சிஸ்டில் இலங்கைக்கு வந்து இறங்கி 2 – 3 மணித்தியாலங்களுக்குள் ஐரோப்பிய நாடொன்றிற்குள் செல்லும் வகையில் வருகிறார்.

எனினும் அந்த இடங்களில் கடவுச்சீட்டு மாற்றப்படுகிறது. மற்றைய கடவுச்சீட்டு கிழிக்கப்படும். சில இடங்களில் தெரிந்து நடக்கிறது, சில இடங்களில் தெரியாமல் நடக்கிறது, சில இடங்களில் ஒத்துழைப்புடன் நடக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version