இலங்கையில் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் ஆர்க்கியா (Arkia) ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால், இதற்கு முன்னர் இலங்கையில் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் ஆர்க்கியா எயார்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும்.
இதேவேளை இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version