இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று (மே 30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைக் கண்ட அமெரிக்க டொலர் மதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

மக்கள் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 287.09 ரூபாவிலிருந்து 288.06 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 302.53 ரூபாவிலிருந்து 303.55 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 287.03 ரூபாவிலிருந்து 288.78 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300 ரூபாவிலிருந்து 301 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 290 ரூபாவிலிருந்து 291 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 302 ரூபாவிலிருந்து 303 ரூபாவாக அதிகரித்துள்ளது

Share.
Exit mobile version