குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அண்மையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜையை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அவரை சீனாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கோரி, குறித்த சீன பிரஜையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, குறித்த மனுவை மீள பெறுவதாக சீன சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.