அமெரிக்கத் தலைவர்கள் ஒரு தற்காலிக கடன் உச்சவரம்பு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் திங்களன்று (29) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.
அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 66 சென்ட் அல்லது 0.9% உயர்ந்து 77.61 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 75 சென்ட் அல்லது 1% ஆக உயர்ந்து 73.42 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் சனிக்கிழமையன்று 31.4 டிரில்லியன் டொலர் கடன் உச்சவரம்பு மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்க செலவினங்களை நிறுத்துவதற்கான கொள்கை அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்தனர்.
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று இரு தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.