நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றமை, உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டமை போன்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இன்று 22 கரட் தங்கத்தின் விலை 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 163,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 165,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share.
Exit mobile version