நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (30) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிர்மாணத்துறையின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அது தொடர்பான பல வாழ்வாதாரங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொருட்களின் விலை திருத்தம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக மற்றும் பொருளாதார முதலீட்டுக் கொள்கை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version