இரண்டு வருடங்களுக்கு முன்னர் தீப்பிடித்த ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணெய் கசிவு குறித்து மீனவர்கள் தேவையான அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தகவல் அளித்துள்ளதாகவும், கசிவு மேலும் தீவிரமடைந்தால், அது பெரிய கடல் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடும் என்றும் மீனவர்கள் கூறுகின்றனர்.

கப்பல் அழிக்கப்பட்டபோது, ​​அதில் ஏறக்குறைய 1,500 இரசாயன கொள்கலன்கள் மற்றும் ஒரு மெட்ரிக் தொன் எரிபொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் அழிவு இலங்கையின் கடல் சுற்றுச்சூழலுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய நிலையில், நட்டஈடு கோரி தொடரப்பட்ட வழக்கு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version