மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவரைக் கைது செய்ய இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்
ஜெரோம் பெர்னாண்டோவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இன்டர்போலின் (சர்வதேச பொலிஸ்) ஆதரவைக் கோருவது தொடர்பில் இதுவரை சட்ட ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட போதகருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.