நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய பிரிவின் விசேட நீதிமன்ற வைத்தியர் ரொஹான் ருவன்புர மற்றும் ருஹூனு பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற வைத்திய பிரிவின் பேராசிரியர் விசேட நீதிமன்ற வைத்தியர் யு.சி.ஜி. பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
5 மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலம், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சட்ட வைத்திய சபையின் பரிந்துரையின் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய வழங்கிய உத்தரவின் பிரகாரம் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்டது.