நாட்டில் வட்டிவீதங்களை குறைப்பது குறித்து இலங்கை மத்திய வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் முதலாம் திகதி மத்திய வங்கியின் நாணய சபை ஒன்று கூடி, இதுதொடாபான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது துணை நில் வைப்பு வட்டிவீதம் (வசதி) 15.50 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதம் 16.50 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டில் பணவீக்கம் குறைந்து வருகின்ற நிலையில், வட்டிவீதங்கள் கடந்த ஏப்ரல் மாதமே குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும் அப்போது வட்டிவீதம் குறைக்கப்படாமல் அவ்வாறே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது அதனை குறைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share.
Exit mobile version