குரங்குகள் ஏற்றுமதிக்கு எதிரான மனு தொடர்பான உண்மைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) சட்டமா அதிபருக்கு ஜூன் 26 வரை கால அவகாசம் வழங்கியது.
இலங்கையின் 100,000 குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதுடன், இந்த நடவடிக்கையின் மூலம் பாரிய மிருகவதைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்காக சீனாவில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.